RSS Amplifier

News source

Nakkheeran : Latest Posts

RSS Feed

nakkheeran.inSource feed ↗10 articles

Overdue Last read · last published · next check
Last read 12 hours ago, longer than this feed's 1 hour schedule.

Latest articles

5 நிமிடங்கள் குளித்த இந்தியப் பெண்; லட்ச ரூபாய் அபராதம் விதித்த அரசு

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவருக்கு, அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது பற்றி, அப்பெண் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதாவது, அந்த பெண் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, 5 நிமிடங்கள் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்த போது அக்கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ எச்சரிக்கை மணி (அலாரம்) ஒலித்துள்ளது. இதனால், அவருக்கு அந்நாட்டு அரசு 1800 டாலர்கள் (ரூ.1.30 லட்சம்) அபராதம்…

மோடிக்கு படிச்சா பிடிக்காது! Advocate Balu

அவசரமாக டெல்லி புறப்பட்ட நயினார் நாகேந்திரன்

சமீபத்தில் பாஜகவில் தேசிய அளவில் பல்வேறு தலைவர்களின் பதவிகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியாக இருந்த வானதி சீனிவாசன் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவசரமாக இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச்…

ஏலத்தில் உலக சாதனை-விற்றுத் தீர்ந்த காந்தியின் அரிய வரலாற்று ஆவணங்கள்

தேசப்பிதா மகாத்மா காந்தியின் அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் மும்பையில் நடைபெற்ற ஏலத்தில் பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகிப் புதிய உலக சாதனை படைத்துள்ளது. மும்பையில் உள்ள பிரபல ஏல நிறுவனமான 'சாப்ரன் ஆர்ட்' நடத்திய இந்த ஏலத்தில், காந்தியின் அரிய ஆவணங்களை வாங்குவதற்குப் பலரும் கடுமையான போட்டிப் போட்டனர். மகாத்மா காந்தி தனது நெருங்கிய சகா மற்றும் சீடரான…

அழுகிய நிலையில் உடல் மீட்பு - நள்ளிரவில் மாணவர்கள் போராட்டம்- காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே உள்ள கல்லூரி விடுதி ஒன்றில், மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் அவரது அறையிலேயே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் சங்கரா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற மாணவி, மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டே அங்குள்ள கல்லூரி விடுதியிலும் தங்கி…

'விதிமுறைகளை மாற்றிய ஸ்டேட் பேங்க்'-வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வங்கியின் அடிப்படை சேமிப்பு கணக்கு எனப்படும் பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ரொக்கப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவைக்கான கட்டணங்களை எஸ்பிஐ வங்கி மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளும், கட்டண உயர்வும் வரவிருக்கும்…

ரயில் பயணிகளே உஷார்! குடிநீரில் ஆபத்தான ஈகோலை பாக்டீரியா - சிஏஜி அறிக்கையால் அதிரும் ரயில்வே

இந்திய ரயில் நிலையங்களில் விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பானது தானா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள புறநகர் அல்லாத 512 முக்கிய ரயில் நிலையங்களில், 2019-20 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய தணிக்கைக் குழு அதிரடி ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் வெளிவந்துள்ள தகவல்கள் ஒட்டுமொத்த ரயில் பயணிகளையும் அதிர்ச்சியில் உறைய…

இன்றைய ராசிப்பலன் -  21.08.2026

இன்றைய பஞ்சாங்கம் 21-08-2026, ஆவணி 04, வெள்ளிக்கிழமை, நவமி திதி இரவு 11.36 வரை பின்பு வளர்பிறை தசமி. அனுஷம் நட்சத்திரம் பகல் 11.53 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பகல் 11.53 வரை பின்பு மரணயோகம். வரலட்சுமி விரதம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30.…

கணவன் மனைவி இடையே தகராறு; 3 வயது குழந்தையுடன் இளம் பெண் விபரீத முடிவு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அரசர்குளம் கீழ்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், வாகன ஓட்டுநர். இவரது மனைவி தனலெட்சுமி. இவர்களது மகன் அமுதன்(3). சுரேஷ் - தனலெட்சுமி இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் எலித் தொல்லையை சமாளிக்க எலிப்பொறி வைத்ததில் 3 வயது அமுதனின் விரல் சிக்கியுள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்…

“இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழ்நாடு அரசு?”  - பெ.சண்முகம் கண்டனம்!

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி ஆகியவை நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்திலிருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்…