# ampara (news sources) — RSS Amplifier

Recent posts from the 1 feeds in the RSS Amplifier directory that cover ampara.

Page: <https://rssamplifier.com/topics/ampara/news>  
Feed: <https://rssamplifier.com/topics/ampara/news.md>

---

## [மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணித்தியால நீர் வெட்டு – நீர்ப்பாவனையாளர்களுக்கு அறிவிப்பு](https://www.battinews.com/2026/08/4_0709173787.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை (22) நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், தொடர்ச்சியான நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்

## [ரூ.20,000 இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் விளக்கமறியலில் !](https://www.battinews.com/2026/08/20000.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

20,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்காக இலஞ்சப் பணத்தைக் கோரிப் பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே, இலஞ்சம்

## [பண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் பறிமுதல்](https://www.battinews.com/2026/08/blog-post_8126.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத்

## [கல்கிசையில் ரூ. 2.4 கோடி பெறுமதியான தங்க நகைகள், பணம் திருட்டு – சந்தேகநபர் கைது](https://www.battinews.com/2026/08/24.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

கல்கிசை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சுமார் 2 கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சந்தேகநபர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து கல்கிசை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன்

## [பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு](https://www.battinews.com/2026/08/blog-post_453.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அர்ச்சுனா அறிவிப்புயாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் இன்னும் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

## [விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு தென் கொரியா வழங்கிய சிறப்பு கௌரவம்!](https://www.battinews.com/2026/08/blog-post_489.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நாட்டு ஊடகச் செய்திகளின்படி, 2022 ஓகஸ்ட் 12 ஆம் திகதி சியோல் நகருக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹ்வாசாங் கடற்கரைக்கு அப்பால் உள்ள மஞ்சள் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில்

## [இலங்கையில் பணவீக்கம் 7.2 சதவீதமாக அதிகரிப்பு](https://www.battinews.com/2026/08/72.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், உணவுப் பிரிவின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் பதிவான 3.3 சதவீதத்திலிருந்து ஜூலை மாதத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும், உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் ஜூன் மாதத்தில்

## [வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு – வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார் முக்கிய எச்சரிக்கை](https://www.battinews.com/2026/08/blog-post_547.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

நாட்டில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாகன உரிமையாளர்களின் கவனக்குறைவும், பாதுகாப்பற்ற முறையில் வாகனங்களை நிறுத்துவதும் திருட்டுகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.பொதுமக்களின் வாகனங்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பில்

## [வங்கி அதிகாரி என ஏமாற்றி ஹோட்டலில் திருடிய நபர்: பொதுமக்களின் உதவியைக் கோரும் பொலிஸார்](https://www.battinews.com/2026/08/blog-post_840.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல ஹோட்டல் ஒன்றில் தந்திரமாகப் புகுந்து பொருட்களைத் திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.கடந்த 03 ஆம் திகதி குறித்த ஹோட்டலுக்கு வருகை தந்த நபரொருவர், தான் ஒரு முன்னணி தனியார் வங்கியின் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.பின்னர், தனது வங்கி ஊழியர்கள் இரவு விருந்திற்காக வருகை தரவுள்ளதாகக் கூறி

## [நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்](https://www.battinews.com/2026/08/blog-post_454.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

2026 சிறுபோக நெல் கொள்வனவுக்கு தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் குறைநிரப்பு பிரேரணைய இன்று முற்பகல் விவசாய அமைச்சர் லால்காந்தவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதும், இந்த

## [Point once, get highlights (Sponsored)](https://crawlproof.com/a/7buW41bGe323)

_2026-08-21 · **Sponsored**_

Get minutes worth watching from a whole game — point once

## [யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பிற்குள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதி](https://www.battinews.com/2026/08/blog-post_1835.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள்

## [22ஆம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் 09 மனுக்கள் தாக்கல் - சபாநாயகர் சபைக்கு அறிவிப்பு](https://www.battinews.com/2026/08/22-09.html)

_2026-08-21 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி இதுவரையில் 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேலும் இரண்டு மனுக்களின்

## [மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!](https://www.battinews.com/2026/08/blog-post_21.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு சென்ற பெண் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி, மோதிரம் ஒன்று மற்றும் 8 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்ற அந்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரை இன்று (20) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது அங்குள்ள அன்னதான

## [16 வயதுக்குப் பின்னர் கல்வியைத் தொடரும் ஆண் பிள்ளைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – பிரதமர் ஹரிணி](https://www.battinews.com/2026/08/16.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

நாட்டில் 16 வயது வரையிலான கட்டாயக் கல்வி தற்போது சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிள்ளைகளைப் பாடசாலைக் கட்டமைப்புக்குள் தக்கவைத்துக்கொள்வது ஒரு பெரிய சவாலாக மாறிவருவதை அவதானித்துள்ளோம். குறிப்பாக, 16 வயதுக்குப் பிறகு கல்வியைத் தொடரும் சிறுவர்களின் குறிப்பாக ஆண்பிள்ளைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சிப் போக்கு காணப்படுகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய

## [12 வயது பேத்தியை துஷ்பிரயோகம் செய்த 81 வயது முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!](https://www.battinews.com/2026/08/12-81-15.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின்

## [மூத்த பாடகி விஷாரதா நந்தா மலானி காலமானார்](https://www.battinews.com/2026/08/blog-post_837.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

இலங்கை இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கிய மூத்த பாடகி நந்தா மலானி காலமானார்.அவர் காலமானபோது அவருக்கு வயது 82. அவர் நாவலவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி அலுத்கம, லெவண்டுவவில் பிறந்த நந்தா மலானி, இளம் வயதிலிருந்தே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தினார்.

## [ஞானசார தேரரின் விகாரை பாதுகாப்பில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு – சம்பவம் தொடர்பில் விசாரணை](https://www.battinews.com/2026/08/blog-post_5071.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

ராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

## [கல்முனையில் முடியாத கலாசார உடை அஷ்ரப் வைத்தியசாலையில் மட்டும் எப்படி சாத்தியம்?– கஜேந்திரகுமார் MP கேள்வி](https://www.battinews.com/2026/08/mp_0884480473.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

சுற்றுநிரூபத்துக்கமைய முஸ்லிம் பெண் சுகாதார சேவைகள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கலாசார உடையுடன் பணியில் ஈடுபட முடியாது என்றால், அவர்கள் எவ்வாறு அதே சுற்று நிரூபத்துக்கமைய கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட முடியும். எனவே இந்த சீருடை சர்ச்சையின் பின்னணியில் அரசாங்கம் தான் உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற

## [சிறுவர்கள் இருவரைத் தாக்கி காணொளி பதிவு செய்த நபர் கைது](https://www.battinews.com/2026/08/blog-post_74.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதல் சம்பவம் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று (19) புதன்கிழமை சந்தேகநபர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் பலாங்கொடை -

## [இறக்குமதி அழகுசாதனப் பொருட்கள், காலணிகள் மீது சோதனை](https://www.battinews.com/2026/08/blog-post_464.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் குறித்து விசேட அவதானம் செலுத்தி, நாடு முழுவதும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய, கடந்த 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் 108 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது, பொருட்கள் பெறப்பட்ட விபரத்தை உறுதிப்படுத்தும் முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய 84 வணிக

## [International money transfers (Sponsored)](https://crawlproof.com/a/pO0Vx617d8i1)

_2026-08-20 · **Sponsored**_

Send money to other countries and manage multi‑currency balances online.

## [கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் - சுற்றுநிரூபத்தில் பிரச்சினை இருந்தால் அரசாங்கமே திருத்த வேண்டும் –சாணக்கியன் MP](https://www.battinews.com/2026/08/blog-post_732.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தில் திருத்தம் – சாணக்கியன் வலியுறுத்தல் கொழும்பு, ஆகஸ்ட் 20, 2026 –பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டமூலம் இன்று (20.08.2026) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், சட்டமூலத்தை நிறைவேற்றுவதுடன் மாத்திரம் அரசாங்கத்தின் பொறுப்பு முடிவடையாது என

## [நீண்டகாலமாக தொலைபேசி கம்பிகளைத் திருடி விற்ற கும்பல் சிக்கியது – 6 பேர் கைது](https://www.battinews.com/2026/08/6_0890310666.html)

_2026-08-20 · Batticaloa · Battinews.com - Sri Lanka Tamil News_

நீண்டகாலமாக தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த ஆறு சந்தேகநபர்களை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.அநுராதபுரம் பகுதியில் தொலைபேசி கம்பிகள் திருடப்படுவது தொடர்பாக ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தினால் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இம்முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து

