RSS Amplifier

Blog

Spot News24

நடுநிலை தகவலின் நம்பிக்கை!

spotnews.lkSource feed ↗18 posts

Overdue Last read · last published · next check
Last read 5 hours ago, longer than this feed's 2 hours schedule.

Written by

Latest posts

விமானிகள் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் சிறப்பு விசா.!!!

விமானிகள் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் சிறப்பு விசா.!!! தென் கொரியாவின் ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால், மஞ்சள் கடலில் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இரண்டு விமானிகளின் உயிரைக் காப்பாற்றிய இலங்கைத் தொழிலாளர்களுக்கு தென் கொரிய அரசாங்கம் சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 ஆகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மீன்பிடிப் படகில்…

தபால் துறையை நவீனமயமாக்கும் புதிய திட்டம்; பாரம்பரிய மிதிவண்டிகளுக்குப் பதிலாக மின்சார இருசக்கர வாகனங்கள்.!!!

தபால் துறையை நவீனமயமாக்கும் புதிய திட்டம்; பாரம்பரிய மிதிவண்டிகளுக்குப் பதிலாக மின்சார இருசக்கர வாகனங்கள்.!!! இலங்கை தபால் திணைக்களத்தின் நாடு தழுவிய விநியோக வலையமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், பாரம்பரிய தபால்காரர் மிதிவண்டிகளுக்குப் பதிலாக மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் பசுமை முன்னெடுப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், தபால்…

மட்டக்களப்பில் ஆகஸ்ட் 22 முதல் தினசரி நீர்வெட்டு; உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைவு.!!!

மட்டக்களப்பில் ஆகஸ்ட் 22 முதல் தினசரி நீர்வெட்டு; உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைவு.!!! –எம்.ரி.எம்.யூனுஸ்– நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான நீர்வழங்கலை மேற்கொள்வது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம்…

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கை துரிதம்; பாதுகாப்புத் தரப்புக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்.!!!

வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு நடவடிக்கை துரிதம்; பாதுகாப்புத் தரப்புக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்.!!! வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை விரைவில் விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவுறுத்தல்…

எரிபொருள் இறக்குமதிச் செலவு உயர்வு; 2025ஐ விட 1.17 பில்லியன் டொலர் அதிகம்.!!!

எரிபொருள் இறக்குமதிச் செலவு உயர்வு; 2025ஐ விட 1.17 பில்லியன் டொலர் அதிகம்.!!! கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்களினால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் மதிப்பீடு…

டிப்பர் – உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு.!!!

டிப்பர் – உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் உயிரிழப்பு.!!! • மொனராகலை, கும்புக்கன பகுதியில் அதிகாலை நேர்ந்த கோர விபத்து. மொனராகலை மாவட்டம், கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலம் பகுதியில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று, எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன்…

ஹோர்முஸ் கடல் போக்குவரத்துத் தடையால் இலங்கை ஊடாக புதிய சரக்கு பாதை திறப்பு.!!!

ஹோர்முஸ் கடல் போக்குவரத்துத் தடையால் இலங்கை ஊடாக புதிய சரக்கு பாதை திறப்பு.!!! • 14 அதிநவீன லெம்போர்கினி சொகுசு கார்கள் டுபாய், கட்டார் நோக்கி விமானம் மூலம் அனுப்ப நடவடிக்கை. ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்துத் தடைகள் காரணமாக, இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்துப் பாதையொன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன…

கணினி முறைமை கோளாறு: பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்.!!!

கணினி முறைமை கோளாறு: பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்.!!! இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள கணினி முறைமை தொடர்பான தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களை (Police Clearance Certificates) வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் கணினி முறைமையில் ஏற்பட்டுள்ள கோளாறே இதற்கான காரணம் என…

இரு சிறுவர்களை கொடூரமாக தாக்கி காணொளி பதிவு; 26 வயது தந்தை கைது.!!!

இரு சிறுவர்களை கொடூரமாக தாக்கி காணொளி பதிவு; 26 வயது தந்தை கைது.!!! பலாங்கொடை – பின்னவலை பகுதியில் தனது பராமரிப்பிலிருந்த 7 வயது ஆண் குழந்தையையும், 4 வயது பெண் குழந்தையையும் கொடூரமாக தாக்கி, அதனை காணொளியாக பதிவு செய்து வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவிக்கு அனுப்பியதாக கூறப்படும் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும்…

சிறுவர் மற்றும் பெண்கள் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கம்; அபராதம் 10 மடங்கு உயர்வு.!!!

சிறுவர் மற்றும் பெண்கள் தொழிலாளர் பாதுகாப்பு சட்டம் கடுமையாக்கம்; அபராதம் 10 மடங்கு உயர்வு.!!! பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பான குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ.10,000 இலிருந்து ரூ.1 இலட்சமாக அதிகரிக்கும் சட்டத் திருத்தம் இன்று (20) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல்…

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழக்கு: சஷி வீரவன்சவுக்கு முன்பிணை.!!!

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழக்கு: சஷி வீரவன்சவுக்கு முன்பிணை.!!! • வழக்கு செப்டெம்பர் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு. முறையற்ற வகையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பான குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சஷி வீரவன்சவை முன்பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. குறித்த…

மொட்டை மாடியில் ரகசிய கஞ்சா தோட்டம்; கல்முனையில் 56 வயது நபர் கைது.!!!

மொட்டை மாடியில் ரகசிய கஞ்சா தோட்டம்; கல்முனையில் 56 வயது நபர் கைது.!!! • இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை. -பாறுக் ஷிஹான்- கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார் புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை…

முஸ்லிம் யுவதிகளின் ஆடை உரிமை: சுற்றறிக்கையை மாற்ற அரசு தயார் – அமைச்சர் நளிந்த.!!!

முஸ்லிம் யுவதிகளின் ஆடை உரிமை: சுற்றறிக்கையை மாற்ற அரசு தயார் – அமைச்சர் நளிந்த.!!! கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடை விவகாரம் தொடர்பில், தேவையானால் சுகாதாரத் துறையின் சுற்றறிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் நாடாளுமன்றில் கொண்டுவந்த ஒத்திவைப்புவேளை விவாதத்தில்…

பாசிக்குடா சுற்றுலா வலயமாக மேம்படுத்த திட்டம்; மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல்.!!!

பாசிக்குடா சுற்றுலா வலயமாக மேம்படுத்த திட்டம்; மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல்.!!! பாசிக்குடாவை மையமாகக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை உலக வங்கியின் அனுசரணையுடன் அபிவிருத்தி செய்வது தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெ.எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்,…

பாடசாலை மாணவர்களிடம் அத்துமீறல் குற்றச்சாட்டு; 20-க்கும் மேற்பட்ட பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு.!!!

பாடசாலை மாணவர்களிடம் அத்துமீறல் குற்றச்சாட்டு; 20-க்கும் மேற்பட்ட பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு.!!! • பொதுச்சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு. -பாறுக் ஷிஹான்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை…

கல்லடி இசை, நடனக் கல்லூரி விடுதியில் மாணவி உயிரிழப்பு; பொலிஸார் விசாரணை.!!!

கல்லடி இசை, நடனக் கல்லூரி விடுதியில் மாணவி உயிரிழப்பு; பொலிஸார் விசாரணை.!!! கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை, நடனக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 20 வயதுடைய மாணவி ஒருவர் இன்று (19) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நாடகத்துறைக்கு தெரிவு…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது; ஆகஸ்ட் 28 வரை விளக்கமறியல்.!!!

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது; ஆகஸ்ட் 28 வரை விளக்கமறியல்.!!! -பாறுக் ஷிஹான்- ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச்சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்…

சுகாதார விதிமீறல்; களுவாஞ்சிகுடி மொத்த விற்பனை கடைக்கு அதிரடி பூட்டு.!!!

சுகாதார விதிமீறல்; களுவாஞ்சிகுடி மொத்த விற்பனை கடைக்கு அதிரடி பூட்டு.!!! மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடுமையான சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த மொத்த விற்பனை பலசரக்குக் கடையொன்று, களுவாஞ்சிகுடி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (18) அதிரடியாக மூடப்பட்டுள்ளது. மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள்…