RSS Amplifier

News source

Polimer News : Latest Posts

RSS Feed

polimernews.comSource feed ↗20 articles

Live Last read · last published · next check

Latest articles

மாலை நேர மழையால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன குறிப்பாக திருக்கண்டீஸ்வரம் தூத்துக்குடி சன்னாநல்லூர் ஆண்டிப்பந்தல் பனங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குருவை நெற்பயிர்கள் மழை காரணமாக சாய்ந்தன. தொடர்ந்து வயலில் தேங்கிய மழை நீரில் தற்போது…

த.வெ.க. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி த.வெ.க. கிளைச் செயலாளரைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூதாட்டி உள்பட 6 பேர் காயமடைந்தனர். பல ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் உள்ள விஜய் என்பவரின் தரப்பினருக்கும், புதிதாகக் கட்சியில் இணைந்த விஜயகாந்த் என்பவரின் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியதாக கூறப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த 5-வது நாளில் சாலை அமைக்க முதலமைச்சர் உத்தரவு..!

ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக தாண்டிக்குடி சென்ற போது சாலை வசதியின்றி மலை கிராம மக்கள் வசித்ததாகவும், தான் ஆட்சியமைத்த ஐந்தாவது நாளில் அங்கு சாலை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், படப்பிடிப்பின் போது அந்த மலைச் சாலையில் விஜய் நடந்து சென்ற காட்சிகளை முதலமைச்சர் விஜயின் தனி செயலாளர் ஜெகதீஷ் வெளியிட்டுள்ளார்.

8.25% பேருக்கு மட்டுமே படித்த படிப்புக்கு ஏற்ற வேலை - நிதி ஆயோக்.

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவானாலும்,அவர்கள் 8.25 சதவீதம் பேர் மட்டுமே நிதி ஆயோக் வெளிட்ட அறிக்கையில்,இந்தியாவின் கல்வி முறைக்கும்,நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதி மற்றும் திறன் களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளதை இது வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர், ((பல கல்வி நிலையங்களில் பாடத் திட்டகள் காலாவதியானவையாக இருப்பதாகவும்,)) மாறிவரும் தொழில்துறைத்…

தி.மு.க. ஆட்சியில் வெற்று அறிவிப்புகள் ஏன்? - அமைச்சர் ரமேஷ் கேள்வி.

கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை சார்பில் வெற்று அறிவிப்புகளே வெளியிடப்பட்டதாகவும், அதனை ரத்து செய்யும் நிலைக்கு த.வெ.க. அரசு தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 31ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்கை விளக்க குறிப்பு வியாழன் இரவு 10 மணிக்கு தான் வந்து சேர்ந்தது - செந்தில் பாலாஜி

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு கொள்கை விளக்க குறிப்பு வியாழன் இரவு 10 மணிக்கு தான் வந்து சேர்ந்ததாகவும், முழு குறிப்பையும் படித்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு தான் உறங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே அதனை வழங்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுறுத்தினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் சிறைக்கு மாற்றம்..!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் அடியாலா சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இம்ரான் கான் உடல் நிலை குறித்து பலவிதமான தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இம்ரான் கானை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு பரிசோதனை செய்து…

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் கைது..!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியியல் தொல்லை கொடுத்த வழக்கறிஞர் ஜெபஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர். பேருந்தில் பயணித்த சக மாணவிகள் மற்றும் பயணிகள் தட்டிக்கேட்டதையும் பொருட்படுத்தாமல் ஜெபஸ்டின் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதைக் கண்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் அவரை பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வங்கியில் அடமானமாக வைக்கப்பட்ட 2,179 கிராம் தங்க நகைகள் மோசடி..!

சென்னை அயனாவரத்தில் உள்ள IOB வங்கிக் கிளையில் 21 வாடிக்கையாளர்கள் அடமானமாக வைத்த சுமார் 2 ஆயிரத்து 179 கிராம் தங்க நகைகளுக்குப் பதிலாக போலி நகைகளை மாற்றி வைத்து, சுமார் 3 கோடியே 9 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக உதவி மேலாளர் பொட்னூரு முரளிகிருஷ்ணா கைது செய்யப்பட்டார். வங்கியில் இருந்து எடுத்துச் சென்ற அசல் தங்க நகைகளை வேறு இடங்களில் அடமானம் வைத்துப் பெற்ற பணத்தை ஆன்லைன் விளையாட்டு மற்றும் சொந்த…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு..!

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மரியாதை..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மரியாதை செலுத்தினார். சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பின், ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர்கள் தூவி டிகேஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர், அதற்கு அருகே தரையில் சிறிது நேரம் அமர்ந்து ராஜீவ்…

543 நாடாளுமன்றத் தொகுதிகளை அப்படியே 'ஃப்ரீஸ்' செய்ய தீர்மானம்: தயாநிதி மாறன்

தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி நீர் பங்கீடு விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக உறுதியாக நிற்பதாக தயாநிதி மாறன் தெரிவித்தார். சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேட்டி அளித்த அவர், 543 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அப்படியே 'ஃப்ரீஸ்' செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தீர்மானம் நிறைவேற்றியதை சுட்டிக்காட்டினார். ஆனால், அமித் ஷாவைச் சந்தித்தப் பிறகு தனது…

ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ்..!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஜவ்வாது மலையில் ஓம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளில் பங்கேற்றுவிட்டு வந்த நடிகர் தனுஷை, பார்த்தவுடன் அவரது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கத்தி கூச்சலிட்டு அவருடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர். ஜவ்வாதுமலை கோவிலூர் பேருந்து நிலையம் மற்றும் போளூர் அமிர்தி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புகைப்பட கலைஞர்களை கெளரவித்த முதலமைச்சர் விஜய்..!

சர்வதேச புகைப்பட தினத்தை பத்திரிக்கை துறை புகைப்பட கலைஞர்களுடன் கொண்டாடினார் முதலமைச்சர் விஜய். சென்னை தலைமைச் செயலகத்தில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து கெளரவித்து மகிழ்ந்தார்.

முல்லைப்பெரியாறு அணை கட்டுமான பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம் - கேரள முதல்வர்

சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர் மாநாட்டில் முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக பேசியுள்ள கேரள முதலமைச்சர் சதீஷன், அணையின் அமைவிடம், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான செலவுகளை கேரளம் ஏற்கும் என்றும் கூறினார். மேலும் அணைக்கட்டியப் பிறகு தமிழ்நாட்டிற்கு உரிய முழுப்பங்கு நீரையும் கேரளம் திறக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதைத்…

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் பொதுமக்கள் அவதி..!

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகள், தற்போது பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். நீண்ட நாட்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் தேங்குதல், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட…

செப்.17ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் - மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உலகப் புகழ்பெற்ற மீனாட்சி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் வருகை தரக்கூடும் என்பதால், கோவிலின் நான்கு பக்க வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்,…

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதி..!

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, இதய நோய் பாதிப்பிற்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான செளகார் ஜானகி, இதயத்துறை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 1950ஆம் ஆண்டு செளகார் திரைப்படத்தில் அறிமுகமான ஜானகி, செளகார் என்ற சிறப்புப் பெயரோடு அழைக்கப்பட்டு வருகிறார். 2020ஆம் ஆண்டு வெளியான…

கேரளா குருவாயூர் கோவிலில் ஸ்காட்லாந்து எம்.பி. மற்றும் கேரளா பெண் திருமணம்..!

ஸ்காட்லாந்து எம்.பி. மார்ட்டின் டே மற்றும் கேரளாவைச் சேர்ந்த நிதின் சந்த்தின் திருமணம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இந்து முறைப்படி நடைபெற்றது. நிதின் சந்தின் முதல் திருமணத்தில் பிறந்த 22 வயது மகன் வேதிக் சங்கரும் திருமணத்தின்போது உடனிருந்தார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிதின் சந்த், 2008ஆம் ஆண்டு உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்றபோது ஸ்காட்லாந்து தேசியக் கட்சியைச் சேர்ந்த மார்ட்டின் டே என்பவருடன்…