RSS Amplifier

News source

News Tamil

Latest Tamil News

newstamil.lkSource feed ↗38 articles

Live Last read · last published · next check

Latest articles

நாரஹேன்பிட்டி, நாவல வீதி சோதனைச் சாவடியில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

நாரஹேன்பிட்டி, நாவல வீதி சோதனைச் சாவடியில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அச்சிறுமியை மீட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் வாகனத்தைக் கைவிட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். The post நாரஹேன்பிட்டி, நாவல வீதி சோதனைச் சாவடியில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் appeared first on News Tamil .

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிவித்தலுக்கு அமைய அவர் ஆஜராகாதமையினால், அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) இவ்வாறு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது. The…

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்

வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை…

நேபாள வெள்ளம்: இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்

நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. The post கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு appeared first on News…

kG உடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி சிக்கினார்

பாரிய அளவிலான கேரள கஞ்சா (KG)பொதிகளுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார். கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் வியாழக்கிழமை (27) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட ரகசியச் சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரைச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 16 கிலோ 670 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு, போதைப்பொருள் வியாபாரம் மூலம்…

திபெத்தில் மீண்டும் அணை உடைப்பு! – நேபாளம் பொலிஸ் அறிவிப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்பு பனிப்பாறை சரிவு காரணமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திபெத்தில் உள்ள மேடான பகுதியில் உள்ள அணை ஒன்று உடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, இன்று (28) நேபாளம் உயர்வான பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. “திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர்த்தேக்க அணை உடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது” என்று நேபாளம் பொலிஸார் அறிக்கை…

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 100 தொழிலாளர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக…

ஆசிரியர் பிக்கு ஐஸூடன் கைது

பிரதான பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் தேரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரகஸ்மந்திய பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அளுத்கமவில் இருந்து எல்பிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் கார் ஒன்று 25ஆம் திகதி மாலை 6:30 மணியளவில் மறித்துச் சோதனையிடப்பட்டது. அப்போது, அந்தத் தேரரிடம் இருந்த 1,315 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், சாரதியிடம் இருந்த 1,305 மில்லிகிராம்…

அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. தங்களது மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2026 ஓகஸ்ட் 29 ஆம் திகதியை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரச் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் மருந்தாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளின் பெயர்…

‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு

2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. The post ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு appeared first on News Tamil .

பொதுஹெர பகுதியில் ரயில் தடம்புரள்வு

ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும்…

இலங்கை அணி அபாரம் – இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு!

கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியைச் சமநிலையில் முடித்துக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் இமாலய பின்னடைவைச் சந்தித்த போதிலும், இலங்கை வீரர்களின் விடாமுயற்சியால் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம்…

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் அல்லது பயணம் மேற்கொண்டிருக்கும் ஏதேனும்…

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் காணாமல் போன 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 142 இந்தியர்கள், 54 அமெரிக்கர்கள், 53 உக்ரேனியர்கள், 33 ஆஸ்திரேலியர்கள், 33 பிரித்தானியர்கள், 24 கனடியர்கள் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த எட்டுப் பேர் அடங்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் இலங்கையர்கள் எவரும் இருப்பதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு…

அதிவேக நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடம், அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு இடம் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய…

பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளனர் ஏர் கண்டிஷனர் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த போது அந்தப் பிரிவில் 16…

சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. இந் நிலையிலேயே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த…

குடிநீரில் இரசாயனப் பொருட்கள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை

தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி, நேற்று (24) மாலை இது குறித்துத் தெரியவந்ததாகவும், அதற்கமைய உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.…

விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய பங்காளர்களைக் கௌரவித்தது Samsung Sri Lanka

இலங்கை முழுவதும் உள்ள தனது சில்லறை விற்பனை பங்காளர்களின் திறமையைக் கௌரவிக்கும் வகையிலும், நீண்டகால வணிக உறவைக் கொண்டாடும் வகையிலும் ‘சில்லறை விற்பனையாளர்கள் மாநாடு 2026’ (Retailer Summit 2026) நிகழ்வை Samsung ஸ்ரீலங்கா நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது. ‘ஜோன் கீல்ஸ் ஆபீஸ் ஓட்டோமேஷன்’ (John Keells Office Automation – JKOA) மற்றும் ‘சாஃப்ட்லொஜிக் மொபைல் டிஸ்ட்ரிபியூஷன்’ (Softlogic Mobile…

5 மாகாணங்களில் கனமழை எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அம்பாறை,…

‘பஸ் லலித்’ CCIBக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார். The post ‘பஸ் லலித்’ CCIBக்கு அழைத்துச் செல்லப்பட்டார் appeared first on News Tamil .

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக…

2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு

க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை: 2027 ஓகஸ்ட் 03 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை ​க.பொ.த. சாதாரண தரப் (O/L) பரீட்சை: 2027 டிசம்பர் 07 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை The post 2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு appeared first on News Tamil .

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் கொழும்பு வந்தடைந்தார்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) பிற்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவராகச் சேவையாற்றவுள்ள எரிக் மயர், இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தனக்குக் கிடைத்த கௌரவம் எனத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் பலமான ஜனநாயக அத்திவாரத்தின் அடிப்படையில் உறவுகளை…

தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என…

பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார்

இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல சிங்கள பாடகி நந்தா மாலினி காலமானார். தனது 82 ஆவது வயதில் நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி அளுத்கம, லெவந்துவ பகுதியில் பிறந்த நந்தா மாலினி, சிறுவயதிலிருந்தே தனது பாடும் திறமையை வெளிப்படுத்தினார். தனது வளரிளம் பருவத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதிக்கு…

கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் ‘பொருளாதாரப் போர்’ தொடுப்பதாக எச்சரித்த நிலையிலும், ஐக்கிய அரபு இராச்சியம் ஈரானுடனான வர்த்தகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்த நிலையிலுமேயே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 94…

வவுனியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை விமானப்படையினர்

வவுனியா புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர். புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீ வேகமாகப் பரவுவதை உடனடியாகப் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை விமானப்படை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், புரவசம்குளம் பகுதியை விரைவாக அடைந்து தீயைக் கட்டுப்படுத்த தேவையான…

கடும் வறட்சி – குடிநீரை விநியோகிக்க புதிய சுற்றறிக்கை

எல் நினோ நிலைமையின் காரணமாக எதிர்காலத்தில் வறட்சி ஏற்பட்டால், நீர் விநியோகத்திற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றறிக்கை ஒகஸ்ட் 6 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல் நினோ நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து…

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

டெங்கு நோய் தாக்கம் காரணமாக நாட்டில் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இந்த நோய் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்றைய (20) நிலவரப்படி 71 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 93,115 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்…

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக அதன் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசாரணைப்…

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயங்களுக்குள்ளானார். இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த…

19 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் சுமார் 19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது 18 கிலோகிராம் 672 கிராம் ஐஸ்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.p குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் காணப்படும்.…

உண்டியல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் கைது

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்கீழ் 19 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் (உண்டியல் முறையில்) பணப் பரிவர்த்தனை செய்யும் நபர் ஒருவர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) மாலை வேல்லவீதி பொலிஸ் பிரிவில் இந்தச் சோதனை நடவடிக்கை…

டெங்கு மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைக்கால தரவுகளின்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.95% ஆனோர், அதாவது 49,163 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்ட மட்டத்தில் அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கே…

முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிட நடவடிக்கை

தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டின் எஞ்சியுள்ள சில மாதங்களுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக…