📝 அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,
இன்று நாம் பார்க்கப்போவது « il faut » மற்றும் « il vaut » ஆகிய இரண்டு முக்கியமான வெளிப்பாடுகள். இவற்றை நீங்கள் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா?
பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட வினைச்சொற்களிலிருந்து வருகின்றன — « falloir » மற்றும் « valoir ».
✍️ « Il faut » — falloir என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. இது அவசியம் அல்லது தேவையை குறிக்கிறது.
∙ Il faut étudier pour réussir. — வெற்றி பெற படிக்க வேண்டும்.
∙ Il faut partir maintenant. — இப்போது கிளம்ப வேண்டும்.
∙ Il faut du temps pour apprendre une langue. — ஒரு மொழியைக் கற்க நேரம் தேவை.
💡 « Il vaut » — valoir என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. இது மதிப்பு அல்லது தகுதி என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, « il vaut mieux » என்ற வடிவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள்: இப்படி செய்வது நல்லது / சிறந்தது.
∙ Il vaut mieux réviser chaque jour. — தினமும் மீள்பார்வை செய்வது நல்லது.
∙ Ce livre vaut la peine d’être lu. — இந்தப் புத்தகம் படிக்கத் தகுதியானது.
∙ Il vaut mieux ne rien dire. — ஒன்றும் சொல்லாமல் இருப்பது நல்லது.
📌 எப்போது எதைப் பயன்படுத்துவது?
∙ ஒரு கட்டாயமான அல்லது தவிர்க்க முடியாத தேவையை சொல்ல → il faut + infinitif
∙ ஒரு அறிவுரையை அல்லது சிறந்த தேர்வை பரிந்துரைக்க → il vaut mieux + infinitif
🚀 இதுபோன்ற அன்றாடப் பயன்பாட்டு வெளிப்பாடுகளை, பேச்சு வழக்கில் இயல்பாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள என்னுடைய August மாத Zoom வகுப்புகள் தொடங்க உள்ளன!
A1 வகுப்பு : புதன் - வெள்ளி - 9h30 - 11h
A2 வகுப்பு : செவ்வாய் - வியாழன் - 9h30 - 11h
B1 வகுப்பு : செவ்வாய் - வியாழன் - 6h - 7h30
📞 +33 6 52 33 83 57
நன்றி,
தீபக் 🙏
Aucun post

Comments
Nothing yet. Say the first thing.
Sign in to join the conversation.