RSS Amplifier

Deepak Aramuthu · Jul 21, 2026

"De"

0
Sign in to vote or save

Deepak Aramuthu · Deepak Aramuthu

அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,

📝 இன்று ஒரு சின்ன வார்த்தையைப் பார்ப்போம் — « de ». சிறியதாகத் தெரிந்தாலும், பிரெஞ்சு மொழியில் இது பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

✍️ 1. அளவைத் தெரிவிக்கும்போது « de »

Beaucoup de personnes — நிறைய பேர்
Un peu de sucre — கொஞ்சம் சர்க்கரை
Trop de travail — அதிகமான வேலை

✍️ 2. மறுப்பு வாக்கியங்களில் « du / de la / des » → « de »

J’ai du temps. — எனக்கு நேரம் இருக்கிறது.
Je n’ai pas de temps. — எனக்கு நேரம் இல்லை.
Elle boit du café.Elle ne boit pas de café.
— அவள் காபி குடிக்கிறாள். → அவள் காபி குடிப்பதில்லை.

✍️ 3. பன்மை பெயர்ச்சொல்லுக்கு முன் adjective வந்தால் « des » → « de »

J’ai acheté des chaussures. — நான் ஷூக்கள் வாங்கினேன்.
J’ai acheté de nouvelles chaussures. — நான் புதிய ஷூக்கள் வாங்கினேன்.

✍️ 4. உடைமையைத் தெரிவிக்க « de »

Le livre de Marie — மேரியின் புத்தகம்
La voiture de mon frère — என் சகோதரனின் கார்

✍️ 5. « de » = « இருந்து »

Je viens de France. — நான் பிரான்ஸிலிருந்து வருகிறேன்.
Nous rentrons du Canada. — நாங்கள் கனடாவிலிருந்து திரும்புகிறோம்.

💡 இங்கே de + le = du ஆக மாறுகிறது.

✍️ 6. சில வினைச்சொற்களுடன் « de » கட்டாயமாக வரும்

Avoir besoin de — தேவைப்படுதல்

J’ai besoin de ton aide.
— எனக்கு உன் உதவி தேவை.

✍️ 7. இரண்டு பெயர்ச்சொற்களை இணைக்க « de »

Une tasse de café — ஒரு கப் காபி
Une salle de bain — குளியலறை
Un cours de français — ஒரு பிரெஞ்சு வகுப்பு
Une paire de chaussures — ஒரு ஜோடி காலணிகள்

📌 « de » ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால், அதன் பின்னால் இருக்கும் லாஜிக்கைப் புரிந்துகொண்டால், ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியாக மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை.

🚀 இதே போன்ற இலக்கண விடயங்களைப் முழுமையாக பயிற்சி செய்ய விரும்புகிறீர்களா?

எங்கள் A2 சுய பயிற்சித் திட்டத்தில்:

📚 52 Chapters
🎧 75 Audio
📝 Exercises, Correction
📄 Exam Papers

உங்கள் நேரத்திற்கு ஏற்ப, தன்னிச்சையாகக் கற்றுக்கொள்ளலாம்!

👉 frenchkalvi.fr/decouvrir

நன்றி,
தீபக் 🙏

Aucun post

Read the original on mozhi.substack.com

Comments

Nothing yet. Say the first thing.

    Sign in to join the conversation.