RSS Amplifier

Deepak Aramuthu · Aug 17, 2026

🇫🇷 பிரெஞ்சில் ஒப்பிடுவது

0
Sign in to vote or save

Deepak Aramuthu · Deepak Aramuthu

அனைவருக்கும் வணக்கம், நான் தீபக்,

📝 இன்றைய பாடம்: ஒப்பீட்டு உரிச்சொற்கள் (Le comparatif)

பிரெஞ்சு மொழியில் இரண்டு விஷயங்களை ஒப்பிடும்போது மூன்று வடிவங்களைப் பயன்படுத்துகிறோம்: மேன்மை (supériorité), தாழ்வு (infériorité), சமநிலை (égalité).

✍️ கட்டமைப்பு:

plus + adjectif + que → அதிகம் (மேன்மை)
moins + adjectif + que → குறைவு (தாழ்வு)
aussi + adjectif + que → சமம் (égalité)

💡 எடுத்துக்காட்டுகள்:

∙ Paris est plus grand que Lyon.
பாரிஸ் லியோனை விட பெரியது.

∙ Ce livre est moins intéressant que l’autre.
இந்தப் புத்தகம் மற்றதை விட குறைவாகச் சுவாரஸ்யமானது.

∙ Elle est aussi patiente que sa sœur.
அவள் தன் சகோதரியைப் போலவே பொறுமையானவள்.

∙ Il travaille plus que moi.
அவன் என்னை விட அதிகமாக வேலை செய்கிறான்.

∙ Nous avons moins de temps que vous.
எங்களிடம் உங்களை விட குறைவான நேரமே உள்ளது.

📌 விதிவிலக்குகள் நினைவில் கொள்ளுங்கள்:

bon → meilleur (que) — நல்ல → சிறந்த
mauvais → pire (que) — கெட்ட → மோசமான

📚 எப்போது எதைப் பயன்படுத்துவது?

∙ Adjectif-ஐ ஒப்பிடும்போது → plus/moins/aussi + adjectif + que

∙ Nom (அளவு / எண்ணிக்கை) ஒப்பிடும்போது → plus de/moins de/autant de + nom + que

∙ Verbe-ஐ ஒப்பிடும்போது → verbe + plus/moins/autant que

🚀 நீங்கள் புதிய பிரெஞ்சு வகுப்பில் இணைய வேண்டுமா ?


📞 தொடர்புகொள்ளுங்கள் :
+33 6 52 33 83 57

நன்றி,
தீபக் 🙏

Aucun post

Read the original on mozhi.substack.com

Comments

Nothing yet. Say the first thing.

    Sign in to join the conversation.